எப்படி வந்தது மனித குலம்
சீனப் புத்தாண்டின் தொடக்கத்தில் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.
புத்தாண்டு பொதுவாக அந்த நிகழ்வைப் பற்றிய சில இனிமையான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கான நேரமாக இருக்கும். ஆனால் நான் மனித குலத்தை நோக்கி மிகவும் நெருங்கி வரும் பேராபத்தைத் தான் காண்கிறேன்,மேலும் இந்த உலகில் உள்ள அனைவருக்கும் பல விஷயங்களை எடுத்துக் கூற தெய்வங்களால் அழைக்கப் பட்டேன்.
நான் வெளிப்படுத்த இருக்கும் ஒவ்வொரு விஷயமும் உயர்ந்த,நெருக்கமாக பாதுகாக்கப்பட்ட ரகசியம்,மேலும் இவையெல்லாம் விவகாரங்களின் உண்மையான தன்மையை வெளிப்படுத்தவும்,மேலும் மக்களுக்கு மற்றொரு வாய்ப்பை கொடுத்து பாதுகாப்பை வழங்கவும் இவை பகிரப்படுகின்றன.
முதல் கேள்வியே மனிதகுலம் எப்படி உருவானது என்பதுதான். இந்த பிரபஞ்சமானது, நான்கு நிலைகளை உள்ளடக்கிய ஒரு அசாதாரண நீண்ட கால ஓட்டத்தைக் கடந்துள்ளது: அந்த நான்கு நிலைகள் உருவாக்கம், தேக்கம் ,சிதைவு
மற்றும் அழிவு .அழிவு நிலையின் இறுதிப் புள்ளியை அடைந்ததும், பெரிய பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தின் முழுமையான அழிவு - -நாம் வாழும் பிரபஞ்சம் உட்பட- உடனடியாக நடைபெறுகிறது,மேலும் அனைத்து உயிரினங்களும் அழிந்துவிடும்!
ஒரு நபர் இறக்கும் போது ,அவரது உடல் சிதைந்து அழிந்து போவது மட்டுமே ஆகும்,அதே நேரத்தில் அவரது உண்மையான ஆன்மா(அவர் உண்மையில் இறந்தாலும் மற்றும் அவரது உடல் அழியும் போது) இறப்பதில்லை .அடுத்த வாழ்க்கையில் மறுபிறவி எடுக்கும்.
பிரபஞ்சம் உருவாக்கம்,தேக்கம்,சீரழிவு மற்றும் அழிவின் வழியாகச் செல்வது போல ,மனிதர்களும் பிறப்பு,முதுமை,நோய் மற்றும்.
இறப்பு ஆகியவற்றை கடந்து செல்கிறார்கள்.இவைகள் பிரபஞ்சத்தின் விதிகள், இன்னும் உயர்நிலை ஜீவன்கள் கூட இவற்றுக்கு உட்பட்டவர்கள், கால அளவு மட்டும் அதிகம் .இந்த செயல்முறை அவரவர்களின் உயர் நிலைக்கேற்ப விகிதாச்சாரத்தில் வரையப்படுகிறது.அவர்களின் பிறப்பும்,இறப்பும் அவர்களுக்கு வேதனையை தருவதில்லை.மற்றும் இந்தசெயல்முறையின் போது முழுவதும் அவர்கள் மிகுந்த அறிவாற்றலுடன் இருப்பார்கள்.இது ஒரு சட்டையை கழற்றி மற்றொன்றை அணிவது போலாகும் மற்றொருவார்த்தையில் சொல்வதானால் உயிர்கள் இயல்பான நிலையில்
அழிவதில்லை.பிரபஞ்சமும்,அண்டவெளியின் ஆட்சியும் இறுதி நிலையில்
உருவாக்கம், தேக்கம், சீரழிவு மற்றும் அழிவு ,செயல் முறைகளில் சிதைந்து விடும் என்றால், உயிர்கள் மறு பிறப்பு எடுப்பது இல்லை. மற்றும் உயிர்களும் (வஸ்து) பொருட்களும் துகள்களாக மாறி ஒன்றுமில்லாமல் ஆகி விடும் .தற்பொழுது மனித உலகமானது இறுதி கட்டத்தில் உருவாக்கம், தேக்கம், சீரழிவு, அழிவு என்ற முன்னேற்ற நிலையில் அழிவு என்ற இறுதிக்கட்டத்தை அனுபவித்துக் கொண்டிருக்கின்றது. அதன் இறுதி நிலையில் எல்லா வகைகளும் மோசமான நிலைக்கு உருமாறி விதியின்படி அழிவு என்பது உறுதியானது. இந்த காரணத்தினால் தான் உலகம் மிகுந்த தொல்லைக்கு உட்பட்டு இருக்கின்றது. நல்ல எண்ணங்களே இல்லாமல் மக்களின் மனங்கள் மாற்றம் அடைந்தும் ஒழு க்க கேடும் மற்றும் போதைப்பொருள் பழக்கம் பரவியுள்ளன. மற்றும் மக்களின் மனம் நாத்திகத்தை ப் பதிவிட்டுள்ளது. இவைகள் எல்லாம் அண்டவெளியின் கடைசி நிலையின் தவிர்க்க முடியாதது என பேசுகின்ற காலத்தை வந்தடைந்துள்ளோம்.
சிருஷ்டி கர்த்தாவானவர் அண்டவெளியில் உள்ள எல்லா உயர்நிலை ஜீவன்களையும் அதுவுமில்லாமல் கனிவானவர்களையும் நல்லவர்களையும் மற்றும் புகழ் பெற்ற படைப்புகளையும் எடுத்துக் கொள்வார். அதனால் தொடக்கமான அழிவு நிலையில் சிருஷ்டி கர்த்தாவானவர் முன் நின்று எண்ணற்ற உயர்ஜீவன்களை வெளி வரம்பான அண்டவெளியில்(பொதுவாக தெரியும் தெய்வீக மண்டலத்தின் வெளியே ) எந்த இடத்தில் தெய்வங்களே இல்லையோ அங்கு பூமியை உருவாக்கினார். ஆனால் பூமிக்கு தனித்து இயங்கும் திறன் இல்லை. அதற்கு அண்ட வெளியின் கட்டமைப்பு தேவை.இதனால் அது சுற்றோட்ட அமைப்பை வாழ்க்கை மற்றும் விஷயங்கள் அடங்கியுள்ளதை ஏற்படுத்திக் கொள்ளும் . இதை உயர் நிலை ஜீவன்கள் மூன்று மண்டலங்கள் என்று குறிப்பிட்டனர். உய்வடையும் இறுதி நேரத்திற்கு முன் உயர்நிலை ஜீவன்களே எவ்வளவு உயர்வாக இருந்தாலும் சிருஷ்டிகர்த்தாவின் அனுமதி பெற்றே இதற்குள் வருவதற்கும் போவதற்கும் முடியும் .இந்த விரிவான மூன்று மண்டலங்கள் மூன்று முக்கிய மண்டலங்களைக் கொண்டது.ஆசை எனும் மண்டலம் (yu) பூமியில் வாழும் உயிர்கள், மனித குலம் உட்பட ஏற்படுத்திக் கொண்டது. இதற்குமேல் இரண்டாவது மண்டலம் விருப்பங்கள்(se) என்னும் பகுதியுள்ளது.இதற்கு மேல் மூன்றாவது மண்டலம் விருப்பில்லாதது(wu se) .அடுத்தடுத்து ஒவ்வொரு மண்டலமும் அதன் கீழுள்ள மண்டலத்தை விட உயர்வும் பெருமையும் கொண்டதாகயிருந்தாலும் ஒருவராலும் தெய்வீக சாம்ராஜ்ஜியத்துடனோ அதற்கு மிகவும் மேலுள்ள பரலோக ராஜ்ஜியங்களுடனோ ஒப்பிடமுடியாதது. உண்மையில் பரலோகம் என்று மக்கள் சாதரணமாக சொல்லும் மண்டலம் மூன்று மண்டலங்களுக்குள் ஒன்றான விருப்பமுள்ள மண்டலம் அல்லது விருப்பில்லாத மண்டலம் என மூன்று மண்டலங்களுக்குள் அடங்கியது. ஒவ்வொரு மூன்று மண்டலங்களும் பத்து தளங்கள் கொண்டது.மொத்தமாக நாம் மூன்று தளங்களையும் சேர்த்துக்கொண்டால் முப்பத்து மூன்று தளங்களாகும். மனிதகுலம் வசிக்கும் ஆசை என்ற தளம் மிகவும் கீழ்மையான ,மோசமான சூழ்
நிலைகளைகொண்டது. இங்கு வாழ்க்கை வேதனை தர வல்லது,குறுகியது
மேலும் மனித உலகத்தில் மிகவும் கொடுமையானது என்னவெனில்,சில விஷயங்களை உண்மையில் ஏற்றுக் கொள்ளபட்ட மதிப்பு மிக்க உண்மை என்று மக்கள் எடுத்துக்கொள்வது. மனிதர்கள் எதனை உண்மை என்று கருதுகிறார்களோ ஒட்டுமொத்தமாக பெரிய பிரபஞ்சத்தில் அது எதிர்மாறாக கருதப்படுகின்றது. (ஆனால் உயர்நிலை ஜீவன்கள் மனிதனுக்கு புகட்டிய மிகப்பெரிய உண்மைகள்ஃபா விதிவிலக்கு).எடுத்துக்காட்டாக, போரில் வெற்றி பெற்றவர் ஆட்சியாளராக வருவதையோ, இராணுவப் படையால் கைப்பற்றபட்ட பிரதேசத்தையோ, அல்லது வலிமை மிக்கவர்கள் ஹீரோக்களாக க் காட்டப்படுவதையோ தெய்வீகமானது சரியானதாக க் கருதுவதில்லை, ஏனெனில் மற்றவர்களைக் கொன்று வலுக்கட்டாயமாகப் பறித்துக்கொள்வது உள்ளதால் .அது பிரபஞ்சத்தின் வழி அல்ல, அல்லது உயர்நிலை ஜீவன்கள் இந்த விஷயங்களில் அப்படிச்செல்வதுமில்லை.இருந்தாலும் மனித உலகத்தில் இவைகள் தவிர்க்க முடியாமல் மேலும் ஏற்றுக்கொள்ளபட்டதாகி விட்டது.அவைகள் மனித உலகத்தின் வழிகள் ,ஆனால் பிரபஞ்ச வழியிலிருந்து முரண்பட்டது. இதனால் ஒருவர் மேல் உலகத்திற்கு திரும்பிச் செல்ல விரும்பினால் அவர் உண்மையான உயர்ந்த நியதிகளை தனக்குள் கடை பிடிக்க வேண்டும் .சில மக்கள் மற்றவரை விட கொஞ்சம் சிறப்பாக வாழ்கின்றோம் என்று திருப்தியடைகிறார்கள் ஆனால் இம்மாதிரி மனிதர்கள் மனித மண்டலத்திலுள்ள மற்ற மனிதர்களுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்கிறார்கள், உண்மையில் இங்குள்ள ஒவ்வொருவரும் பிரபஞ்சத்தின் குப்பைத்தொட்டியில் வாழ்வதாகவே கருதப்படுகின்றது, இந்த மூன்று மண்டலங்களும் அண்ட வெளியில் வெளிப்புற சுற்றளவில் நிறுவப்பட்டுள்ளன,மேலும் இங்குள்ள அனைத்தும் கீழ்மையான , கொச்சையான, மிக குறைந்த ,மற்றும் அசுத்தமான துகள்களால் -மூலக்கூறுகள் ,அணுக்கள் இது போன்றவைகளால் ஆனது. உயர்நிலை ஜீவன்களின் பார்வையில், பிரபஞ்சத்தின் எறிந்து விட பட்ட குப்பை இங்கு தான். இதனால் அவர்கள் இந்த தளத்தின் மூலக்கூறுகளை தூசி அல்லது களிமண் என்று கருதுகின்றனர் மேலும் தாழ்மையான இடங்கள் என்று பார்க்கின்றனர்.மனிதன் தெய்வத்தினால் களிமண்ணிலிருந்து உருவாக்கப்பட்டவன் என்பது சில மதங்களின் மூல கோட்பாட்டின்நம்பிக்கை.உண்மையில் மனிதன் மூலக்கூறுகளின் தளத்தில் பொருண்மையிலிருந்து உருவாக்கப்பட்டவன்.
சிருஷ்டி கர்த்தாவின் உத்தரவுப்படி உயர்நிலை ஜீவன்கள் எப்பொழுது மனிதனை உருவாக்கினார்களோ,அப்பொழுது சிருஷ்டி கர்த்தா,மனிதகுலத்தை அவரவர்களின் தனித்துவமான பிரதிமையாக உருவாக்க அறிவுறுத்தினார். இந்த ஒரு காரணத்தினால், வெள்ளை,மஞ்சள்,கருப்பு மற்றும் மற்ற இனங்கள் உள்ளன.அவர்களின் வெளிப்புறத்தோற்றம் மாறுபட்டாலும், அவர்களின் உள்ளேயிருக்கும் மூல ஆன்மா சிருஷ்டி கர்த்தாவால் வழங்கப்பட்டது. அதனால்தான் அவர்கள் பொதுவான மதிப்புகளைக் கொண்டுள்ளனர். சிருஷ்டி கர்த்தா உயர்நிலை ஜீவன்களை மனிதனை உருவாக்க வழி நடத்தியதன் நோக்கம் இறுதி நிலையில் மனிதனை பயன்படுத்தி பெரிய பிரபஞ்சத்திலுள்ள எல்லாவுயிர்களுக்கும் – புனிதமானவர்களையும் சேர்த்து- அப்பொழுது உய்வை வழங்குவதற்கே.
ஆனால் ஏன் சிருஷ்டி கர்த்தா உயர்நிலை ஜீவன்களை தாழ்ந்த மற்றும் கீழ்த்தரமான இடங்களில் மனிதனை உருவாக்கச்சொன்னார்? அது ஏனெனில் எப்பொழுது பிரபஞ்சத்தின் தாழ்மையான பகுதியில் மிகவும் கடினமான இடங்களில் பொருட்கள் முயற்சியும் வேதனையும் அடையும் பொழுது ஒருவன் தன்னை ஆன்மீக பயிற்சியின் மூலம் உயர்த்திக் கொண்டு அவனுடைய அல்லது அவளுடைய கர்மாவை அழிக்க முடியும்.எப்பொழுது ஒருவன், வேதனையான தருணங்களில் ,இன்னும் நல்ல எண்ணங்கள், நன்றியுணர்வு மற்றும் நல்ல மனிதனாக இருக்க முடிந்தால் அவன் அல்லது அவள் முழுமையாக வளருவார்கள். உய்வடைவது என்பது கீழிலிருந்து மேல் நோக்கி செல்லும் செயல்முறை, எனவே ஒருவர் அடிநிலையிலிருந்து தொடங்க வேண்டும்.இங்கு வாழும் எவருக்கும் வாழ்க்கை முயற்சி செய்கிறது. சிறப்பாக செயல்பட முயற்சிக்கும் போது மக்களிடையே பதற்றங்கள் வருகின்றன,இயற்கை சூழலின் பயங்கரமான நிலை ,மற்றும் வாழ்க்கையை பெறுவதற்கு அதிக சிந்தனையும் முயற்சியும் தேவை என்பது உண்மை என சில உதாரணங்களை குறிப்பிடலாம். இந்த எல்லா சூழ்நிலைகளும் மக்களுக்கு தங்களை உருவாக்கிக் கொள்ளவும் தன் கர்மாவை குறைப்பதற்கும் வாய்ப்பை வழங்குகின்றன.கஷ்டங்களை சந்திப்பது மக்கள் தங்கள் பாவங்களுக்கும் கர்மாக்களுக்கும் பரிகாரம் செய்ய உதவும் என்பது உறுதி.மற்றும் வலி மிகுந்த சூழ்நிலைகள் மற்றும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு மத்தியில் நல்ல- இயல்புடனிருக்க நிர்வகிக்கும் எவரும் தகுதியையும் நல்லொழுக்கத்தையும் வளர்த்துக் கொள்கிறார்கள்,அதன் விளைவாக, அவர் அல்லது அவள் ஆன்மாவின் உயர்வை அடைவார்கள்.
நவீன காலத்தின் வருகையுடன் , சிருஷ்டி கர்த்தா பிரபஞ்சத்தின் பல உயிர்களை காப்பாற்ற முக்கியமாக மனித உடலைப் பயன்படுத்த விரும்பினார். எனவே இங்குள்ள பெரும்பாலான மனித உடல்களிலுள்ள மூல ஆன்மாக்கள் அவற்றில் அவதாரம் எடுத்த உயர் ஜீவன்களாய்,மாற்றபட்டன. மனித உடலின் மூலம், அவர்கள் கஷ்டங்களை பொறுத்துக்கொண்டு கர்மாவையும்,பாவங்களையும்குறைக்கமுடியும் மேலும் சத்தியமில்லாத இந்த இடத்தில், அவர்கள் கடவுள் போதித்த உயர்ந்த உண்மைகளை பற்றிக்கொண்டு நன்மையிலும் ,கருணையிலும் விடாமுயற்சியுடன். இருந்து ஆன்மாவின் உயர்வை அடையமுடியும். இறுதிக்காலம் இப்போது நம்மிடம் உள்ளது; மூன்று மண்டலங்களுக்கு வெளியே செல்லும் சுவர்க்க வாசல் திறக்கப் பட்டுள்ளது, மேலும் சிருஷ்டி கர்த்தா விடுதலைக்காக அத்தகைய உயிரினங்களைத் தேர்ந்தெடுக்கிறார் .
சிருஷ்டி தொடங்கிய போது பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் உருவாக்கம், தேக்கம், மற்றும் சிதைவு நிலைகளில் தூய்மையற்றதாக,தாழ்வானதாக மாறியது. இதனால் தான் பொருட்கள் அழிவை நோக்கிச் செல்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், பெரிய பிரபஞ்சத்திலுள்ள அனைத்தும் மோசமாகி விட்டன ,படைப்பின் வாழ்க்கை, துவக்கத்தில் இருந்தது போல் இனி இல்லை அவர்கள் இனி தூய்மையானவர்கள் அல்ல,அவர்கள் அனைவரும் கர்மாவையும் பாவத்தையும் பெற்றிருக்கிறார்கள். மேலும் இது அழிவுக்குக் காரணமாகின்றது .இந்த வகையான பாவம் மதச் சூழல்களில். அசல் பாவம் என்று குறிப்பிடப்படுகிறது. அதனால் பிரபஞ்சம் காப்பாற்றப் பட வேண்டும் என்பதற்காக, சிருஷ்டி கர்த்தா பல உயர்நிலை ஜீவன்களையும் தெய்வீக இறையாண்மைகளையும், பூமிக்கு இறங்கி ,மனித வடிவத்தை இந்த அமைப்பில் எடுக்குமாறு வழி நடத்தினார். அங்கு அவர்கள் கஷ்டப்பட்டு தங்கள் பாவங்களுக்கு பரிகாரம் செய்து தங்களைத் தாங்களே புதியவர்களாக உருவாக்கிக் கொண்டு-மீண்டும்-பரலோகத்திற்குச் செல்வார்கள் . (சிருஷ்டி கர்த்தா மனித குலத்தை காப்பாற்றும் அதே நேரத்தில் புதிய பிரபஞ்சத்தை மீண்டும் உருவாக்கி வருகிறார்).புதிய பிரபஞ்சம் முற்றிலும் தூய்மையானது மற்றும் மிகவும் புகழ் பெற்றது. இது போன்ற இடத்தில்முயற்சிசெய்து ஒருவர் தனது எண்ணங்களை இன்னும் நல்லொழுக்கத்துடன் வைத்திருக்க முடியும் என்றால்; நவீன விழுமியங்களின் தாக்குதலுக்கு எதிராக அவர் தனது நிலைப்பாட்டை தக்க வைத்துக் கொள்ள முடியுமானால்,மற்றும் பாரம்பரியமானவற்றை கடை பிடித்து; நாத்திகர் மற்றும் பரிணாம முகாம்களின் தாக்குதல்களை எதிர்கொண்டு அவர் இன்னும் தெய்வீகத்தை நம்பினால் அந்த நபர் தனது நோக்கத்தை நிறைவேற்றுவார்: உய்வைப் பெற்று சுவர்க்கத்திற்கு திரும்ப முடியும்.உலகில் இப்போது வெளிப்படும் மடத்தனங்கள் அனைத்தும் உயர்நிலை ஜீவன்களால் இறுதி கட்டத்திற்காக திட்டமிடப்பட்டது. இங்குள்ள உயிர்களை சோதித்து உய்வுக்கு த் தகுதியானவர்களா என்று பார்ப்பது அவர்களின் இலக்காகும், கடினமான காரியங்களை சந்திக்கும் பொழுது தன் பாவங்களையும் மேலும் கர்ம வினைகளையும் தீர்த்துக் கொள்ள வாய்ப்பளிப்பதுமே அவர்களின் குறிக்கோளாகும்.மேலும் இவையனைத்தும் மக்கள் உய்வடையவும், விடுதலை பெற்று, பரலோகத்திற்கு செல்லவுமே செய்யப்பட்டன.
இந்த பூமியில் உள்ள மக்களின் வாழ்க்கையின் நோக்கம் உலகில் எதையாவது சாதிப்பது அல்ல என்பதை இவையனைத்தும் கூறுகின்றன வாழ்க்கையில் மக்கள் செய்யும் தீவிர முயற்சிகள் மற்றும் முயற்சிகள், மற்றும் அவர்கள் விரும்புவதைப் பெறுவதற்கான அவர்களின் உந்துதல்,நேர்மையற்ற வழிகளில் ஈடுபடுவதைக்கூட உள்ளடக்கியது,இறுதியில் மக்களை ஒழுக்கக்கேடானவர்களாக ஆக்குகின்றன.மக்கள் இவ்வுலகிற்கு வந்து மனிதர்களாக மாறியதற்குக் காரணம், அவர்களின் பாவங்களுக்கும் மற்றும் கர்மாக்களுக்கும் பரிகாரம் செய்து,மற்றும் குறிப்பிடத்தக்க ஆன்மீக முன்னேற்றம் அடைவதேயாகும்.மக்கள் உய்வையடைய வேண்டிஇந்த உலகத்திற்கு வந்தார்கள். அவர்கள் வந்து மனித உருவம் எடுத்துக்கொண்டது சிருஷ்டி கர்த்தாவின் வருகைக்காகவும் மற்றும் அவருடைய பாதுகாப்பிற்காகவும் காத்திருந்து பரலோக ராஜ்ஜியத்திற்குத் திரும்பவுமே.காத்திருக்கும்போது அவர்கள் பல கடந்த கால வாழ்க்கையில் தகுதியை வளர்த்து க்கொண்டனர்,அதுவே மக்களின் மறுபிறப்பின் நோக்கமாகும்.இந்த உலகத்தின் கலவரமான இயல்பு இந்த உயிர்களை ஏதோ பெரியதாக ஆக்குவதாகும். நிச்சயமாக,சில மனிதர்கள்,இக்கட்டான சமயங்களில் தெய்வீக உதவியை நாடும்போது,முடிவில் திருப்தியடையாமல்,கடவுளை வெறுக்கத் தொடங்கினர்-அதன் விளைவாக அவருக்கு எதிராகவும் மாறுகிறார்கள்.சிலர் பேய்,இருண்டபக்கம் , திரும்பி இன்னும் கூடுதலான பாவங்களைச் செய்து இன்னும் அதிகமான கர்மங்களைச் செய்கிறார்கள்.இது போன்றவர்கள்,அவர்கள் இன்னும் பாதுகாப்பை அடைய வாய்ப்பு இருந்தால்,அதிவிரைவில் வந்து மன்னிப்புக்காக கடவுளிடம் மன்றாடுவது நல்லது.ஒருவருடைய வாழ்க்கையில் நடக்கும் அனைத்தும்-அது நியாயமாகத்தோன்றினாலும் இல்லாவிட்டாலும்-உண்மையில்,ஒருவரின் கடந்த கால வாழ்க்கையில் ,ஒருவர் செய்தவற்றின் நல்லது அல்லது கெட்டதின் கர்ம விளைவு. ஒருவர் தன்னுடைய முந்தைய பிறவியில் கட்டியெழுப்பிய ஆசிர்வாதங்கள் மற்றும் நல்லொழுக்கங்களின் அளவு இந்த வாழ் நாளில் அல்லது ஒருவேளை அடுத்த வாழ்நாளில் என்ன அதிர்ஷ்டம் இருக்கின்றது என்பதை தீர்மானிக்கின்றது.ஒருவர் இப்போது ஆசிர்வதிக்கபட்ட மற்றும் நல்லொழுக்கமுள்ள வாழ்க்கையை வாழ்ந்தால்,ஒருவேளை அது ஒருவரின் அடுத்த வாழ்க்கையில் உயர்பதவி மற்றும் சம்பளமாக உருமாறலாம் அல்லது அது பல்வேறு வகையான செல்வம் மற்றும் அதிர்ஷ்டமாக உருமாறலாம்.ஒருவருக்கு மகிழ்ச்சியான குடும்பம் இருக்கிறதா,அல்லது ஒருவரின் குழந்தைகள் எப்படி மாறுகிறார்கள் என்பதும் இதில் அடங்கும்.சிலர் பணக்காரர்களாவும் மற்றவர்கள் ஏழைகளாகவும் இருப்பதற்கு இதுவே அடிப்படைக் காரணம்,ஏன் சிலர் உயர் பதவிகளை வகிக்கிறார்கள்,மற்றவர்கள் ஆதரவற்றவர்களாகவும் மற்றும் வீடற்றவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதிற்கும் இதுவே காரணம்.ஏழைக்கும் பணக்காரனுக்கும் இடையிலான சமத்துவத்தைப்பற்றி கேவலமான கம்யூனிசம் வெளிப்படுத்தும் கொடூரமானமுட்டாள்தனம் போன்றது அல்ல.பிரபஞ்சம் நியாயமானது.நல்லது செய்பவர்கள் அதற்குப் பாக்கியவான்கள்,அதே சமயம் கெட்டகாரியங்களைச்செய்பவர்கள் திருப்பிச் செலுத்துவார்கள்- இந்த ஜென்மத்தில் இல்லையென்றால் மறுமையில்.ஏனெனில் இது பிரபஞ்சத்தின் மாறாத விதி! சுவர்க்கம்,பூமி,தெய்வீகம் மற்றும் சிருஷ்டி கர்த்தா எல்லா உயிர்களிடத்திலும் கருணையுள்ளவர்கள்.சுவர்க்கமும் பூமியும்,மனிதனைப்போலவே தெய்வீகமும், சிருஷ்டிகர்த்தாவால் உருவாக்கப்பட்டன, மேலும் அவர் சில உயிர்களுக்குப் பிடித்தமானவர்களாகவும்,மற்றவர்களை குறுகிய மாற்றங்களுடனும் விளையாடுவது ஒரு போதும் நடக்காது.சிலர் மகிழ்ச்சியாக வாழ்வதும் மற்றும் மற்றவர்கள் அது போலில்லாமல் இருப்பதும் அவர்களின் கடந்தகால செயல்களுக்கான வெகுமதிகள் மற்றும் பாவத்தண்டனைகளே காரணம்.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதையோ அல்லது தோற்றுப் போவதையோ நீங்கள் பார்க்கும் போது,அது இந்த உலகத்தில் உள்ள விஷயங்களில் இருந்து இயல்பாக வருவது போல் தோன்றும்.ஆனால் அது இறுதியில் அந்த மக்களின் கடந்த கால செயல்களின் கர்ம விளைவுகளாகும் மனிதர்களிடம் ஏதாவது இருந்தாலும் இல்லாவிட்டாலும், அல்லது வாழ்க்கையில் வெற்றி பெற்றாலும் அல்லது தோற்றாலும்,இந்த உலகத்துடன் ஒத்துப்போகும் வழிகளின் விளைவுகளாகும்.எனவே நீங்கள் வாழ்க்கையில் பணக்காரராக இருந்தாலும்,ஏழையாக இருந்தாலும் சரி, நீங்கள் நல்லதைச் செய்வதில் உறுதியாக இருக்க வேண்டும், கெட்ட காரியங்களைத் தவிர்த்து,நல்லவராகவும்,அன்பாகவும் இருங்கள்,ஆன்மீகம் மற்றும் பக்தியுடன் இருந்து மற்றவர்களுக்கு உதவுவதில் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும்.அவ்வாறு செய்வதன் மூலம் ,நீங்கள் ஆசிர்வாதங்களையும் மற்றும் நல்லொழுக்கத்தையும் வளர்த்துக் கொள்வீர்கள்,மேலும் அடுத்த ஜென்மத்தில் அவற்றின் பலனைப் பெறுவீர்கள்.கடந்த காலங்களில் சைனாவில் உள்ள பழைய தலைமுறையினர், வாழ்க்கையில் கஷ்டங்கள் இருக்கும்போது புலம்பாமல் இருப்பது மற்றும் நல்ல செயல்களின் மூலம் நல்லொழுக்கத்தைப் பெறுவதன் மூலம் சிறந்த அடுத்த வாழ்க்கையைப்பற்றி அடிக்கடி பேசுவார்கள்.உங்கள் முந்தைய வாழ்க்கையில் நீங்கள் நல்ல காரியங்களைச் செய்து ஆசிர்வாதங்களைப்பெறவில்லையென்றால் ,உதவிக்காக கடவுளிடம் பிரார்த்தனை செய்வது பயனற்றது என்பதே இதன் முக்கிய அம்சமாகும்.பிரபஞ்சம் அதன் விதிகளை கொண்டுள்ளது, மேலும் உயர்நிலை ஜீவன்கள் கூட அவற்றைக் கடைபிடிக்க வேண்டும்.அவர்கள் கூட செய்யக்கூடாததைச் செய்தால் தண்டிக்கப்படுவார்கள்.எனவே மக்கள் எடுத்துக் கொள்வதைப் போல் விஷயங்கள் எளிமையானவை அல்ல.எதை வேண்டிக் கொண்டாலும் உயர்நிலை ஜீவன்கள் அதைத் தருவார்கள் என்று மக்கள் எதிர்பார்க்க முடியுமா? முன் நிபந்தனை என்ன வென்றால் ,கடந்த காலங்களில் ஒருவர் அதற்கான ஆசிர்வாதங்களையும் நல்லொழுக்கங்களையும் கட்டி எழுப்ப வேண்டும்.அதனால் உங்களுக்கு வரும் விஷயங்கள் உங்களுக்கு இருக்கும் ஆசிர்வாதங்கள் மற்றும் நல்லொழுக்கங்களின் கணக்கு! பிரபஞ்சத்தின் விதிகள் இதைத்தான் கட்டளையிடுகின்றன.ஆனால் அடிப்படை மட்டத்தில் பேசினால்,நீங்கள் விரும்புவதைப் பெறுவது ஆசிர்வாதங்களையும் நல்லொழுக்கத்தையும் குவிப்பதற்கான இறுதி இலக்கு அல்ல.அவற்றை கட்டி யெழுப்புவதன் உண்மையான நோக்கம்,நீங்கள் மீண்டும் சுவர்க்கத்திற்குச் செல்வதற்கான பாதையை அமைப்பதாகும். அது தான் மிக முக்கியமானது, இந்த வாழ்நாளில் அவைகள் உங்களுக்குக் கொண்டு வரக்கூடிய சுருக்கமான மகிழ்ச்சி அல்ல.
ஆசான் லீ ஹோங்ஜூ
ஜனவரி. 20,2023